வெள்ளி, 11 அக்டோபர், 2019

இது ஒரு கேவலமான காலைப் பொழுது..!


என்றைய பொழுதையும் போல இன்றும் 5.30 மணிக்கு எல்லாம் சாவகாசமாக எழுந்து , பல் துலக்கி கிளம்பும் போதெல்லாம், கல்லூரியில் இன்றைய விழாவை சிறப்பாக நடத்திக் காட்ட வேண்டும் என்ற யோசனைகளோடு கழிந்தன.

மேலும் நேற்றைய இரவு படித்த ஒன்றிரண்டு பாடங்களை அசை போட்டப் படி குளித்தும் முடித்தாயிற்று. கடிகாரத்துக்கு என்ன அவசரமோ, கிடுகிடுவென நேரம் ஓடிவிட்டது என எப்போதும் போல இறுதி நேர படபடப்போடு ஆயத்தமாகி வண்டியை இயக்கி வெளிசென்றேன்.

சரியாக இரண்டு நிமிடம் இருந்திருக்கும். கட்டுப்பாட்டை இழப்பது போல் ஒரு உணர்வு. உடனே வண்டியை நிறுத்திவிட்டு பார்த்தால், டயர் பஞ்சர்!!

சரியென்று மனதை தேற்றி கொண்டு அருகில் இருந்த சித்தப்பா வீட்டில் வண்டியை விட்டுவிட்டு, அவரையே பேருந்து நிறுத்தத்தில் இறங்கி விடம்படி பணித்து, ஒரு வழியாக வந்து சேர்ந்தாயிற்று.

அடடே! "காலையில் பேருந்தில் ஐநூறு ரூபாயை நீட்டினால், அவன் கோர முகத்தை அல்லவா நீட்டுவான்" அதனால் நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக்கோ என்று அம்மா சொன்னது நினைவில் உறுத்த, சரி பார்த்துக்கலாம்! என்று அவசர அவசரமாக உறுதி பூண்டேன்.
மாதிரிப் படம்

தாமதம் இல்லாமல், திருப்பூர் - கோவை அதிவிரைவு வண்டி வந்தது. இந்த வழியில் சொகுசு அதிவிரைவு வண்டி, அதுவும் இந்த நேரத்தில் வராதே என்று யோசித்தப் படியே அப்பேருந்து அருகில் வரும்வரை விரைத்துப் பார்த்தேன்.

எனக்கோ நேரம் ஆகிவிட்டது, பராக்கப் பார்த்தப் படி நின்றால், விழா ஏற்பாடுகளை யார் கவனிப்பது என்று ஒருபுறம் கடமை கண்ணன் உதித்து எச்சரித்தார். மறுபுறம், அடடே இது மாற்றுப் பேருந்தாக இருக்குமடா என்று லௌகீக கண்ணன் ஒருபுறம் உந்துதல் கொடுத்தார். மற்றொரு புறமோ, டேய் இதுல கீது ஏறி, அதிகமா பணம் கேட்கப் போறான், ஒழுங்கா அடுத்த பேருந்துல ஏறிக்கோ என்ற பர்ஸ் கண்ணன் பதற வைத்தார்.

சரிரி!! என்ன நடந்தா என்ன! போய் தான் பார்ப்போமே என்று ஏறினேன். செமி - ஸ்லீப்பர் சீட்டுகளை எல்லாஞ் பார்த்த போது பர்ஸ் கண்ணன் தான் நினைவுக்கு வந்தார். நான் நீங்கலாக நான்கு பேரை தவிர வேறு யாருமே இல்லை.

அதனால் இரண்டு மூன்று முறை குறுக்கும் நெடுக்குமாக அலைந்து திரிந்து விட்டு, இலாவகமாக ஒரு சீட்டைப் பிடித்துக் கொண்டேன். புத்தகம் படிக்க ஏற்ற சூழலாக இருந்ததால், நேற்றிரவு 1967-ல் சிறப்பு பேச்சில் பாதியில் நின்ற அண்ணாவை மீண்டும் தொடக்கி வைத்து மாபெரும் தமிழ்க் கனவை புத்தகத்தை கால் மேல் காலிட்டு என்ஜாய்மென்டோடு படித்தேன் என்றாலும், கண்டக்டர் எப்போது வருவார் டிக்கெட் எவ்வளவென்று சொல்வார் என்றே கண் அலைபாய்ந்தது.

ஒருவழியாக, வந்து தீர்ந்தார் 50 ரூபாய் சீட்டை நீட்டினார். நான் எப்போதும் செல்லும் பேருந்தில் 36 ரூபாய். ஆனாலும் நான் அலட்டிக்கொள்ளாமல் இருந்ததற்கு ஒரு காரணம் உண்டு. அந்நூறு ரூபாயில் அய்ம்பது ரூபாய் என்பது கேட்சியான அமௌவுண்ட். அதனால் கண்டெக்கடரின் கண்களில் இருந்து எந்த சலனமும் இல்லை.

சரி இப்படியாக நான்-ஸ்டாப்பாக கோயம்புத்தூர் வந்திருந்தால் நான் ஏன் இந்தக் கட்டுரை எழுதப் போகிறேன். அப்போது நான் எழுதுவதற்கு வேறு ஏதோ ஒரு தூண்டுதல் இருக்கிறது. என்ன அது? ஆம் 50 ரூபாய் பயணத்தில் மொத்தமாகவே நாங்கள் 5 பேரும், இறுதியாக ஒருவரென மொத்தம் 6 பேர் தான் பயணித்தோம்.

ஆக, முந்நூறு ரூபாய் தான் இந்த ட்ரிப்பில் அரசு சம்பாதித்தத் தொகை. முக்கியக் குறிப்பு என்னவென்றால், இடையில் ஒரு டோல் வேறு உள்ளது.

திருப்பூரிலிருத்து கோவைக்கு மொத்தம் 56 கிலோமீட்டர். இதில் எரிபொருளுக்கு செலவான தொகை எவ்வளவு, டிரைவர் - கண்டெக்டர் சம்பாத்தியத்துக்கு எவ்வளவு, டோல் கட்டணம் எவ்வளவு என்று எல்லாத்தையும் ஒட்டுமொத்தமாக கழித்து விட்டு பார்த்தால் அரசு இதில் கண்ட இலாபம் தான் எவ்வளவு?

இதற்கான பதிலை அப்பேருந்தோ சொல்கிறது. உண்மையில் இது கோவை - திருப்பதி அதிவிரைவு வண்டி என்பது அங்கங்கு ஒட்டியிருக்கும் வெங்கடாசலபதி படத்தில் மூலம் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

என் எல்லாவற்றுக்குமான பதிலை இறுதியில் இப்படி கரியை உமிழ்ந்து கொண்டே சொன்னது அந்தப் பேருந்து  " ஏழு குண்டல வாடா வெங்கட்ரமனா கோவிந்தா.. கோ..விந்தா..!"

செவ்வாய், 8 அக்டோபர், 2019

'Excuse me Mr.kandasamy' பாடல் விமர்சனம்

Excuse me Mr.kanthaswamy

ஏன் சார் இவ்ளோ சலிச்சுக்குறீங்க? திரைத்துறையில் தான் இருக்கீங்க! அதுவும் பாடலாசிரியர் வேற, தினம் தினம் புதுசு புதுசா நிறைய அனுபவம், ரசிக்கவும் கொண்டாடவுமே உண்டாக்கப்பட்ட வேலை. உங்களுக்கு என்ன சார் குறைச்சல்?

 அட ஏன்யா நீ வேற! உனக்கே என்னை எப்படி தெரியும்? எழுதின இரண்டு கவிதைத் தொகுப்பும் தமிழக அரசின் விருது வாங்கினதால தானே? அதுக்கே வேட்டு விழுந்துடும் போலயா!

 என்ன சார் சொல்றீங்க? ஆமாயா!  புதுசா வர முக்கால்வாசி இயக்குநர் டெம்ப்ளேட் வச்சுத்தான் கதை எழுதுறான். ஹீரோ இன்ட்ரோக்கு ஒன்னு, காதல் வந்த அப்றம் ஒன்னு, கலட்டிவிட்ட அப்றம் ஒன்னு, இடையில ஒரு ஐடம் சாங். இப்படியே போன ஒரே குண்டுச்சட்டியிலயே வாழ்க்கை போய்டும் போல! நீயே சொல்லு, "ஹீரோ பார்க்கிறான், ஹீரோயின் பார்க்கிறாள். இரண்டு பேருக்கும் காதல் வருது. அப்போ ஒரு பாட்டு வருது" இதே பேக்ரவுண்ட்ல தமிழ்-ல மட்டும் பல்லாயிர பாட்டு இருக்கும். இதோ சூழல் கொடுத்தா என்னதான்யா நாங்களும் எழுதுறது.

 ஹாஹ்ஹா! இது தான்‌ சங்கதியா? சார் ஆயிரமாயிர வருஷமா காதல் ஒன்னு தான். மாற்றம் மட்டும் தான் மாறாததுன்னு இல்ல. காதலும் தான் மாறாதது. என்ன! அது நிகழும் வழித்தடங்களை மட்டும் மாற்றிக் அமைத்துக் கொள்ளுது.

 நீங்க சொன்ன மாதிரி பேக்ரவுண்டுல, ஆயிரமாயிர பாட்டு போட்டாலும் கேட்க ஆள் இருந்தாங்க. இப்போ இருக்க பசங்களுக்கு பாட்டுக்குள்ள நீ என்ன சொல்ல வர, இதுல என்ன புதுசா இருக்குங்குற எதிர்பார்ப்பு தான் அதிகம் இருக்கு.

 காதல் பாடல் வெறும் வர்ணனையா மட்டும் இருந்தா போதாது, அதுல ஒரு செய்தி இருக்கணும்; நகைச்சுவை இருக்கணும். எதாவது ஒரு துணக்கு இருக்குமான்னு ஒவ்வொரு துணை வரியையும் தேடுறாய்ங்க பசங்க.
அப்படி 2009-ல வெளிவந்த ஒரு பாட்டு சொல்லட்டும்மா?

Lyricist viveka


சுசி கணேசன் இயக்கத்துல, விக்ரம் நடிச்சு வெளியான கந்தசாமி திரைப்படத்துக்கு தேவி ஶி பிரசாத் இசையமைத்திருப்பார்

அதுல இப்படியும்  ஒரு காதல் பாடல் எழுதலாம்னு, முன்னுதாரணம் காட்டி முன்வரிசையில் நிற்பார் பாடலாசிரியர் விவேகா. ஆமாங்க நான் சொல்ற பாடல் அதுதான். "எக்ஸ்கியூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி"

 கிட்டத்தட்ட இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டு கால விழுமியங்களை, கால ஓட்டத்துக்கு ஏற்ப கடைசி வண்டியேற்றி கொண்டுவந்திருப்பார்.
தான் காதலிக்கும் அவனோ அவளோ தன்னை காதலிக்காது போனாலும், அவனோ அவளோ மரியாதைக்குரியவரே ஆவார். அதை தமிழுலகு வழங்கிவரும் அதே "மாண்புடைய மன்னவனே" போட்டு தொடங்கினால் முடிப்பதற்குள் சிகரெட்டும் கையுடன் தியேட்டர் வெளியில் ஒரு  பாசறை படர்ந்திரும். அதனால் அத்தனை லாவகமாக, தன் மன்னவனை முதலில் ஏய் என்று விளிக்கிறாள் அந்தப் பெண். ஒலிக்குறிப்பு கேட்டதும், மன்னவான கந்தசாமி(விக்ரம்) திரும்பி பார்க்கிறார் உடனே மிஸ்டர் என்று மரியாதை பதம் சேர்க்கிறாள்.

 அதன் பின் அவள், கொண்டு கூட்டும் மரபு தான் பண்பாட்டின் உச்சாணிக் கொம்பு. ஆம்! பொதுவாக பெண் பார்க்கும் நிகழ்வு என்பது ஆண் தன் சுற்றத்தார் சொந்தங்கள் என் பெறும் புடை சூழ, பெண் வீட்டிற்கு காபி குடிக்கும் நிகழ்வின் பொருட்டாய் ஆற அமர குசலம் விசாரித்து பின் பெண்ணவளை கண்ணது காண, பெண்ணவளின் கண் மண்ணதனையும் மன்னவனையும் காண, இறுதி தீர்ப்பு தபால் வழியோ தாம்பலத்தின் வழியோ அனுப்பப்பட்டு முற்றுப்பெறும்.

அந்த மரபை தான், ஸ்ரேயா பாடுகிறாள். "ஒரு காபி குடிப்போம், கம் வித் மீ" அதிலும் சர்க்கரை அதிகமாகவா குறைவாகவா என்றும், காபி வேண்டுமா டீ வேண்டுமா என்றும் கூட கேள்விக் கேட்காத பழைய பண்பாட்டை உடைத்தெறிந்து "ஹாட் காபி வேண்டுமா, கூல் காபி வேண்டுமா" என்று கியாஸ்வலாக கேட்கிறார்.

இந்த பண்பாட்டின் எச்சங்களை அடுத்து வரும் பத்தியிலும் பரவ விடுகிறார் பாடலாசிரியர். அந்த காலத்தில் பெண்ணை பார்க்கும் ஓரிரு நிமிடங்கள் தான் முடிவெடுக்கும் முக்கியக் குறிப்புகளை வாரி வழங்கும். யார் இவன்(ள்), எப்படி பட்டவர், இருவரின் பழக்க வழக்கங்கள் ஒத்துப் போகுமா? என்பதை ஆராய்வதற்கெல்லாம் வழி இல்லை. அதற்கான வழியை இந்தப் பாடலின் மூலம் சமைத்துக் கொடுக்கிறார் ஸ்ரயோ. ஆம் "ஒரு லாங் டிரைவ் போலாம் கம் வித் மீ!"

அது ஸ்லோவோ ஸ்பீடோ, நீ விரும்பியப்படியே ஓட்டிக்கொள், உனக்கு விரும்பியப் படி நான் இருப்பேன் என்று தன் ஒருதலைக் காதலை ஓரஞ்சாரமாக ஒப்பனைக் கூட்டி அள்ளிக் கொடுக்கிறார் தன் கண்ணாளனுக்கு.

கொஞ்சம் ஹை-டெக்கியாக வலம் வரும் விக்ரம். அவளை நிராகரிக்க பயன்படுத்தும் வார்த்தைகள், அவனின் தத்துவார்த்த ரீதியான கேரக்டரை படிக்க நம்மை பயணப்படுத்தும். "ஓட்ட சிம் கார்டு, எம்ப்டி ஐபாட்" என்று ஒன்னுமில்லாத சரக்காக அவளை பாவனை செய்கிறான்.

 அத்துடன் நின்றிருந்தால் சராசரியான பாடலாசிரியர் பட்டியலில் தன் பெயரை பதிவு செய்திருப்பார். ஆனால் விவேகா மேலுமொரு படி சென்று, சமகாலத்தில் பரவலாக பேசப்பட்ட சம்பவங்களை காதலுக்கு ஏற்ப கதைத்திருக்கிறார்.

 எங்கு போனாலும் துரத்தி வரும் ஹட்ச் டாக் என்பதை "ஹட்ச் புல்டாக்கே நச்சு கீழ்பாக்கே" என்று பாடுகிறார். நில்லுங்க நில்லுங்க. நச்சரிக்கும் கீழ்பாக்கமே என்று அவர் ஆகுபெயரை வெளிப்படுத்த பயன்படுத்திய சொல்லாடல் சுவையானது.

 இடையில் ஸ்ரேயா, மண் ரோடான என்னை மெயின் ரோடாக்க எப்போது வருவாய் என்று புலம்பிக் கொண்டிருக்கும் அதே வேளையில் தன் ஆணார்ந்த அடக்க ஒடுக்கங்களை பக்குவமாக பார்த்துக் கொள்கிறார் விக்ரம்.

 எனினும் அவளின் சோகம் தாளாமல், சமாதானம் செய்யும் முயற்சியில் அழைக்க பயன்படுத்தும் சொல் நுட்பமானது. அவள் மேல் காதல் இல்லாத துள்ளியத்தை நம்மிடம் மறைமுகமாக சொல்லிவிட விக்ரம் வழியாக பாடலாசிரியர் எத்தனிக்கிறார். "எக்ஸ்கியூஸ் ளீ 'மிஸ்' சுப்புலட்சுமி" என்று அவனின் மிஸஸ்ஸாக இருந்தவளை மிஸ் இட்டு அழைக்கிறார். பின் சராசரியாக கொட்டித் தீர்க்கும் நடுத்தர ஆணின் சொற்களை சிந்தி அந்த சரணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.

இதை போல அங்கங்கு.. தேவைப்படும் இடத்தில் மட்டும் பயன்பாட்டில் உள்ள சாதாரண வழக்குகளை பயன்படுத்துவது பெரும் கரும்புள்ளியாக தோன்றாது.

இதன் பின் தான், பாடலாசிரியர் தன் தனித்துவத்தைக் காட்சிப்படுத்த தங்க ரிப்பன் கத்தரித்து வரவேற்கிறார். காதல் பாடலில் அரசியல் பேசலாமா?! ஆம் பேசலாம். அதெப்படி?

"கடவுள் இல்லன்னு சென்னா'ர்' ராமசாமி, காதல் இல்லன்னு சொல்றான் கந்தசாமி" என்று பெரியாரை முன்னிறுத்தி தன் காதல் குறித்த அபிப்பிராயத்தை வெளிப்படுத்துகிறார் விக்ரம். அதிலும் சூட்சுமமாக  அர் விகுதி சேர்த்து சிறப்பு பெறுகிறார். ஆனாலும் 'சாமி' இல்லன்னு ராம'சாமி' சொன்னாருங்களா!? ன்னு யோசிக்கவும் வைக்கிறாரோ?

சரி காதலுக்கு வா.. நீ சொல்றதெல்லாம் ஒப்புக்க மாட்டேன்டி என ஸ்ரேயா ஸ்ட்ராங்காக நோபா(no_pa) நோபா நோபா சொல்கிறார். நீ பெரியாரை முன்னிலைப்படுத்தினால் நான் திராவிடம் முன்னிறுத்தின திருவள்ளுவரையே துணைக்கு அழைப்பேன் டா! என வலு சேர்கிறார். "ஊடல் தாண்டி கூட சொன்னார் கடைசிக் குறளில் ஸார்ப்பா" என்று 'குத்தி'க்காட்டுகிறார்.

அரசியல் பேசியதும் என்னவோ விக்ரமுக்கு நாமம் போடும் நியாபகம் வந்துவிட்டதோ.. "வேணாம் வேணாம் வேணாம் நீ நாமம் போட வேணாம் உன் கூட வந்தா சண்ட போட்டே வாழ்க்கை போகும் வீணா" என‌ எச்சரிக்கிறார்.

அடடடா என லயத்துப் போய்விட்டீரா? இதென்ன காதல் பாட்டின் முற்றமொரு அத்தியாயமா என்று வியக்கிறீரா? மூச்சை இழுத்துப் பிடிச்சிங்கோங்க இன்னும் திகட்ட வருகிறார் பாடலாசிரியர்.

தன்னை ஒருதலையாக காதல் பேசி பேசி இம்சித்து வரும் பெண்ணை வேறொரு கோணத்தில் திட்டுகிறார். அதனோடு பாடலை கேட்பவர்களுக்கு ஒரு வரலாற்றுத் தீனிப் போடுகிறார். "ஹிட்லர் பேத்தியே... ஹிட்லர் பேத்தியே காதல் ஒன்னும் யூதன் அல்ல கொல்லாதே" என்று செல்லமாகத் தீண்டுகிறார்.

ஸ்ரேயா என்ன குறைந்தவரா? நீ ஜெர்மனி என்றால் நான் உன்னை கொன்ற அமெரிக்கா டா! என்று மார்தட்டிக் கொண்டு உத்தமர் ஆபிரகாம் லிங்கனை மெச்சுவது போல விக்ரமை ஏசுகிறார். "லிங்கன் பேரனே... லிங்கன் பேரனே… தத்துவங்கள் பேசி பேசி கொல்லாதே" என்றதோடு நில்லாமல் "காஷ்மீர் நான் நீ பாகிஸ்தான், தீராது டிஷ்யூம் தான்" என்று துருவம் பிரித்து சண்டையிடுகிறார். இதில் மட்டும் எத்தனை வரலாற்று துணுக்குகள்!

இதனூடாக, விவேகா வரைந்து கொண்ட சில சொற்கள் தாறுமாறானது. உப்பு மூட்டை என்பதற்கு டக்(duck) மூட்டை என்ற எதிர்பதம் எல்லாம் ஒரு சில எடுத்துக்காட்டு தான்.

இப்படிபட்ட பாடல்கள் தான் இனி காலங்கடந்தும் நில்லும்.


கீழே இருக்கும் இணைப்பை பயன்படுத்தி, உங்களுக்கும் இந்த பாடல் இதே உணர்வுகளை தருதான்னு பாருங்களேன்.!

'அமெரிக்கக் கண்டம் அளவுக்கு காடுகள் வேண்டும். இல்லையென்றால்....!' எச்சரிக்கும் விஞ்ஞானிகள்


'அமெரிக்கக் கண்டம் அளவுக்கு காடுகள் வேண்டும். இல்லையென்றால்....!' எச்சரிக்கும் விஞ்ஞானிகள்


https://www.vikatan.com/government-and-politics/environment/we-need-to-create-a-usa-size-forest-to-tackle-climate-emergency-says-researchers

திங்கள், 16 செப்டம்பர், 2019

திங்கள், 9 செப்டம்பர், 2019

ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் கமலா பாட்டி

மிகக் குறைந்த விலையில் உணவகம் நடத்துகிறார், கோவை வடிவேலாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கமலா பாட்டி.


செவ்வாய் கிரகமே செல்லும் செங்குத்தான பாலம்!


வளர்ந்து வரும் நெரிசல்மிக்க இந்திய நகரங்களில், 23-வது இடத்தைப் பெற்றிருக்கிறது கோவை. இந்நிலையில் சாலைப் போக்குவரத்தை மேம்படுத்துவதில் அதிக கவனம் பெறவேண்டிய இப்பகுதியில்தான், பாலம் கட்டுமானப் பணிகள் மந்தமாக நடைபெற்றுவருகின்றன.


வெள்ளி, 6 செப்டம்பர், 2019

டிக்..டிக்..டிக் அந்த 15 நிமிடங்கள்


இந்த 15 நிமிடங்களில்தான் சந்திரயான்-2வின் வெற்றி நிர்ணயிக்கப்படும்

பெருமழைக்கு பின் ஊட்டி, ஊட்டிவிடும் பாடம் என்ன

தவறான விவசாய முறை, இயற்கையின் அசாதாரண மாற்றம், புவி வெப்பமயமாதல் என நீலகிரியின் பெருமழையிலிருந்து பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட வேண்டியிருக்கின்றன.

எரியும் பிரேசில்.. உருகும் கிரீன்லாந்து


காலநிலை மாற்றம் என்பது ஏதோ ஒரு நாட்டில் மட்டும் நடக்கும் பேரழிவு அல்ல. மொத்த உலக நாடுகளையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பேரபாயம். அதன் அறிகுறிகள் அமேசான் முதல் இந்தியா வரை எல்லா இடங்களிலும் தெரிகிறது.

வேஸ்ட் பண்ணாட்டி, கேஸ் பேக்! அசத்தும் கோவை ஹோட்டல்!!


`உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்’ என்றால், உணவை வீணாக்குபவர்களை உயிரைப் பறிக்கும் எமனுக்கு சமமானவர்கள் என்றுதானே சொல்ல வேண்டும்.


அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு கடிதம்

`தலைக்கு மேல வெள்ளம் வந்த அப்பறம், சாண்போனா என்ன, முழம்போனா என்ன?' என வியாக்கியானம் பேச மக்கள் இருக்காங்க, அரசு அதிகாரிங்க வீடியோவோட நிக்காம, நாட்டுக்காகவும் கொஞ்சம் நிக்கலாங்களே

அமைச்சரின் #Rain_water_challenge

அமைச்சர் எஸ்.பி. வேலுமணியன் #rain_water_challenge

ஒரு துளி மழைநீர்கூட வீணாகக் கூடாது. இதை நாம் ஒரு சவாலாக எடுத்து நிறைவேற்ற வேண்டும்.


அவ்ளோதான் இந்தியா!

 மக்களை விட கடவுள் பெருசு என்று பேசுகிற நாடுதானே இது? தாழ்த்தப்பட்ட தலீத்தைவிட பூனூல் அணிந்த பிராமணனே பெருசு என்று பீத்துகிற தேசந்தானே இது? ...